மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 128 ஆவது ஜனன தின நிகழ்வு. 31.03.2026.

செல்லையா பேரின்பராசா 

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் அனுசரணையுடன் மண்முனை வடக்கு கிளையின் ஏற்பாட்டில்  தந்தை செல்வாவின் நூற்று இருபத்து எட்டாவது (128 ஆவது)  ஜனன தின நிகழ்வு  மட்டக்களப்பு தந்தை செல்வா சதுக்கத்தில் 31.03.2026 செவ்வாய்க் கிழமை காலை 09.00 மணியளவில் ஓய்வு நிலை கோட்டக் கல்விப் பணிப்பாளரும் , இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மண்முனை வடக்கு கிளையின் செயலாளருமான அ.சுகுமாரன் தலைமையில் இடம்பெற்றது.

முன்னதாக தந்தை செல்வாவின் சிலைக்கு பிரமுகர்களால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு,   மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கிழக்குப் பல்கலைக் கழக அரசியல் விஞ்ஞான பீட பேராசிரியர் நடராசா புஸ்பராசாவினால் நினைவுப் பேருரை நிகழ்த்தப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,  ஞா.சிறிநேசன்,  இ. சிறிநாத்,  மட்டக்களப்பு மாநகர மேயர் சிவம் பாக்கியநாதன்,  போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன் மற்றும் சுவீஸ் நாட்டிலிருந்து வருகை தந்த மூத்த ஊடகவியலாளர் இரா. துரைரெத்தினம் அருட்தந்தை யோஜப் மேரி உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.