– செல்லையா பேரின்பராசா –

சீனித்தம்பி  ஜெயவதி என்பவர்  அம்பாரை  மாவட்டத்தின்  அட்டப்பள்ளம்  எனும்  இயற்கை  எழில் கொஞ்சம்  ஊரில்  பிறந்தார்.   

இவரின்  ஆரம்பக் கல்வி  அட்டப்பள்ளம்  வினாயகர்  வித்தியாலயத்திலும் ,   இனக்கலவரம்  காரணமாக  இடம்  பெயர்ந்து  தனது  எட்டாந் தரம்  தொடக்கம்  பத்தாம் தரம் வரை  முத்தமிழ் வித்தகன்  விபுலாநந்தன்  பிறந்த  ஊரான  காரதீவின்  விபுலாந்தா  மத்திய கல்லூரியிலும் கற்று , மீண்டும்  போர்ச்சூழலின்  நிமித்தம்  மட்டக்களப்பு  மாவட்டம்  களுவாஞ்சிகுடியில்  இடம் பெயர்ந்து  பட்டிருப்பு  மத்திய மகாவித்தியாலயம்  தேசிய  பாடசாலையில்  தரம்  பத்து  தொடக்கம்  உயர்தரம்  வரை  கற்று  முடித்தார்.

இவருடைய  கற்றல் மட்டும்  போராட்டத்துடன்  முடியவில்லை   வாழ்க்கையும் அஃதே அமைந்தது. 

தனது சிறுவயது முதல்  உடமையை  மட்டுமல்ல  இரத்த  உறவுகளையும்  இழந்த   கவிதாயினி ஜெயவதி  மேலும் பட்டப்படிப்பை  தொடர  ஆவலிருந்தும்  அதை  அடையும்  பாக்கியம்  இல்லாதவளாக  பாதுகாப்பின் நிமித்தம்  சிறுவயது  திருமணபந்தத்தில்  புகுத்தப்பட்டவள். இல்லறத்தை  நல்லறமாக்கியதோடு  மட்டும்  நின்று  விடாது  தான் கற்ற  கல்வியை  எந்தவழியிலாவது  பயன்படுத்த  வேண்டும். 

“மண்ணில்  பிறந்தோம் இறந்தோமென்றில்லாது  இறந்த பின்னும்  தன்னை  பற்றி  உலகம்  பேச  வேண்டும்  ” என்பதில்  உறுதியாக  இருப்பவர். 

அந்த  வகையில்  சிறுவயது  கனவு  கொண்டு  சிகரந்தொட  நினைக்கிறேன்  எனும்  கோசத்துடன்  கவிமகள்  ஜெயவதியாக  கலைத்துறைக்குள்  களம்  இறங்கி செயற்படும் ஒருவர்.

அவள்  ஆரம்பம்  அவளின்  இனத்தை  விளித்தெழச்  செய்வதாக  வர  வேண்டும்  என  எண்ணினாள். அதற்கு  அவளையே  அடையாளமாக  எடுத்தாள்  “அணங்கே  அகிலம் வெல்  “எனும்  புரட்சிமிகு  கவிதைகள்  கொண்ட  கவிதைத் தொகுப்பை  வெளியிட்டாள்.  

அந்நூல்  பட்டிதொட்டியெங்கும்  மூலையில்  முடங்கிக்கிடந்த  பெண்களை  விளிக்கச்  செய்தது . என்பது  அந்நூலுக்கு  கிடைத்த  பாராட்டுக்களும்  விருதுகளும்  சொல்லும் .

அடுத்த  படைப்பாக  “சிலம்பொலி ,எனும்  கண்ணகியின்  புகழ்பாடும்  பாடல் இறுவெட்டை  வெளியிட்டாள்.

அதன்னர்  “எழுத்துகளோடு  பேசுகிறேன்  ” எனும்  எழுச்சிமிகு  புட்சிக்  கவிதைத்  தொகுப்பை  மட்டக்களப்பு  தமிழ்ச்சங்கத்தில்  வெளியிட்டார் .

இது  பெயர்  சொல்லும்  படைப்புகளாக  வெளி வந்தவை  இதனை  தாண்டி  இவள்  வெளியீடுகள் தேசியப் பத்திரிகைகள்  ,

சஞ்சிகைகளில்  வெளியாகி  வருவதும்  குறிப்பிடத் தக்கது .

ஒரு  பெண்ணாக  என்னால்  இது  முடியாது  என  எத்துறையிலும்  இவர் ஒதுங்கி  நின்றதில்லை .

சமூக  செயற்பாட்டாளராக ,

ஊடகவியலாளராக ,

பட்டிமன்றப்  பேச்சாளராக ,

விளிப்புணர்வு  வளவாளராக , 

மட்டு  நியுஸ்  தொகுப்பாளினியாக ,  

பல  துறைகளிலும்   முழுமனதுடன்  தன்  திறமையை  வெளிக்காட்டி  வருகிறார்.

 இவர்  விருதுகளை  தேடி  செல்வதை  அடியோடு  வெறுப்பதால்  விருதை  தேடி  செல்வதில்லை  

ஒரு  உண்மையான  கலைஞன்  விருதை  தேடிச்  செல்லக்கூடாது  விருதுகளும்  கௌரவமும்  கலைஞனை  தேடி  வர  வேண்டும் என்பதில்  உறுதியாக  இருக்கிறார். 

அந்த  வகையில்  அவரை  தேடி  பல  அரச  அரச  சார்பற்ற  விருதுகள்  குவிந்தாலும்  தன் சாதனைகளை கௌரவப்படுத்த  வெளிநாட்டு  விருதாக  இந்தியாவை  சேர்ந்த  நந்தவனம் பவுண்டேசன்  வழங்கிய சாதனைப்  பெண்  விருதை  மகிழ்வுடன்  ஏற்றுக்  கொண்ட ஒருவர்.

தான்  இறக்கும் வரை  “ஒராண்டிற்கு  ஓர்  குழந்தையாக  ஓர் படைப்பை  தருவேன்  “என   அவர்  எழுத்துகளோடு  பேசுகிறேன்  நூல் வெளியீட்டு  நிகழ்வில்  தன் கருத்தை  முன் வைத்தார்.

தன் வைராக்கியம் மிக்க  கனவுகளை  கண்களில்  சுமந்து  கையில்  பேனையுடன்  மனம் முழுக்க  நேர்மறை  சிந்தனைகளுடன்  நிமிர்ந்த  நன்நடைபோடுகிறார்.

” மக்கள் குரலோன் “

செல்லையா பேரின்பராசா

(துறைநீலாவணை )