பொலனறுவை குடா பொக்கினை ரொட்டவெவ தமிழ் கனிஷ்ட வித்யாலயத்திற்கு கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பு நிதி உதவி

பொலனறுவை மாவட்டம். குடா பொக்கினை ரொட்டவெவ தமிழ் கனிஷ்ட வித்யாலயத்தில் ஸ்மாட் ரூம் அமைப்பதற்காக கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பினால் நிதி உதவி (120,000/= ) வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் ஆர். தேவராசா அவர்கள் கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பினரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக. இன்று 25.02.2026 பாடசாலையில் நேரடியாக திரு என். சௌவியதாசன் மற்றும். ஓய்வு பெற்ற உதவிக் கல்வி பணிப்பாளர் கண வரதராஜன் ஆகியோரால். பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் இந் நிதி நேரடியாக கையளிக்கப்பட்டது.