கோட்டாபய ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

Kalmunainet இணையத்தள செய்தி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (17) காலை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார்.

அவர் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வீட்டுத் தொகுதி முறைகேடு தொடர்பான விசாரணைக்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
சுமார் சில மணிநேரங்கள் நீடித்த விசாரணைக்கு பின்னர், நண்பகல் 12.00 மணியளவில் அவர் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்.