யாழ் .மட்டுவில் மோகனதாஸ் சனசமூக நிலையத்தின் 78 ஆவது ஆண்டு விழா.
செல்லையா பேரின்பராசா
யாழ் மட்டுவில் மோகனதாஸ் சனசமூக நிலையத்தின் எழுபத்து எட்டாவது ( 78 ) ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் 15.03.2026 ஞாயிறு பிற்பகல் ஆறு ( 06.00 ) மணியளவில் இந் நிலையத் தலைவர் ந. ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
இவ் விழாவில் பிரதம விருந்தினராக கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலை முதல்வர் “செந்தமிழ்ச் சொல்லருவி” சந்திரமௌலீசன் லலீசன் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக யாழ் போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு வைத்திய நிபுணர் டாக்டர் கந்தையா மணிதீபன், நவாலி ஆரோக்கியவாசக வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் லியோன் புஷ்பராணி , மட்டுவில் மகா வித்தியாலய அதிபர் சொலமன் யேசுதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் பல நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.










