ஹட்டனில் இடம்பெற்ற மாபெரும் நாட்டிய கலைவிழா
செல்லையா பேரின்பராசா
ஹட்டன் குமரஹம்ஸ நர்த்தானாலயம் நடத்திய மாபெரும் நாட்டிய கலைவிழா ஹட்டன் டி . கே . டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலை முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசனும் , சிறப்பு விருந்தினர்களாக சிறீபாத தேசிய கல்வியியல் கல்லூரி உப பீடாதிபதி பரதகலாவித்தகர் மாலினி முரளிதரன் கொழும்பு பரதசூடாமணி சுபாஜினி சர்வேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாட்டிய முதுகலைமாணி ஆறுமுகம் பிரேம்குமாரின் நெறியாள்கையில் நூற்று இருபதுக்கும் ( 120 ) இற்கும் மேற்பட்ட மாணவர்கள் நடன ஆற்றுகைகளை மேற்கொண்டனர்.
இவை சாஸ்திரிய நடனங்களாகவும் கிராமிய நடனங்களாகவும் அமைந்திருந்தமை சிறப்பம்சமாகும்.
மலையகம் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முன்னணி கலைஞர்கள் குரலிசை வழங்கியும் பக்க வாத்தியம் இசைத்தும் சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் கல்வி அதிகாரிகள் ஆசிரியர்கள் நடனத்துறை ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
















