செல்லையா பேரின்பராசா.
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டு துறை இளைஞர் விவகார அமைச்சின் – பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஐந்து ஆவணங்களை ஒருசேர வெளியிட்டு வைத்தது.
ஈழத்து கும்மி பாடல்கள் ,
சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி ,
மடு பிரதேச நாட்டு கூத்துக்கள் ,
தெணியாான் படைப்புகள் ,
நெடுந்தீவின் பாரம்பரிய வாழ்வியல் (இறுவட்டு)
இந்த ஐந்து ஆவணங்கள் வட மாகாண கல்வி அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் வெளியிடப்பட்டன.
பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் தர்சினி நிதர்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிறஞ்சன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டு வைத்தார்.
நூல்களுக்கான வெளியீட்டு உரையை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபரும் , பட்டிமன்ற பேச்சாளருமான சந்திரமௌலீசன் லலீசன் ஆற்றினார்.
மதிப்பீட்டு உரைகளை பேராசிரியர் அ. சண்முகதாஸ் , பேராசிரியர் சுபதினி ரமேஷ் , அருட்தந்தை செ. அன்புராசா , விரிவுரையாளர்களான த. அஜந்தகுமார் , கலாநிதி க. ரதிதரன் ஆகியோர் ஆற்றினர்
ஏற்புரைகளை ஆவணங்களின் தொகுப்பாளர்கள் சார்பில் கலாசார உத்தியோகத்தர்களாகிய கு. ரஜீபன் ஜோன்சன், த. நித்தியானந்தன், அ. சிவஞானசீலன், ஜீவநதி ஆசிரியர் க. பரணீதரன் ஆகியோர் வழங்கினர்.
சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் சுகுணாளினி விஜயரட்ணம் நன்றியுரை ஆற்றினார்.
சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் செ. அருள்சந்திரன் நிகழ்ச்சியை தொகுத்து அளிக்கை செய்தார்.













