மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்ற நிலையை முன்னிட்டு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் சுற்றுலா அமைச்சகம் இலங்கையர்களின் பாதுகாப்பை கண்காணித்து வருகிறது. 

குறித்த பிராந்தியங்களில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் தங்கள் நாடுகளுக்குள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்களைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்படுவதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.