நாவிதன்வெளியின் முதல் சட்டத்தரணி ஜனுஷா விக்கினராசா.

கே.எஸ்.கிலசன்

நாவிதன்வெளி பிரதேசத்தில் பல கிராமங்கள் உள்ளன.
கிராமங்கள் என்றாலே அங்கு வளங்கள் குறைவு அதனால் கற்றல் செற்பாடுகள் குறைவு எனவே மாணவர்கள் கலைத்துறையை தாண்டி எந்த துறைகளிலும் சித்தியடைய முடியாது என இருந்த காலம் மாறி என்தான் குறைகள் இருந்தாலும் முயன்றால் எதுவும் முடியுமென அவ்வப்போது சில மாணவர்கள் நிரூபிப்பது வழமை. அப்படி நாவிதன்வெளி பிரதேசத்தின் சில பாடசாலைகளிலிருந்து சில பொறியியலாளர்கள், வைத்தியர்கள் அவ்வப்போது உருவெடுத்தார்கள்.

எனினும் சட்டத்துறையில் யாருமில்லை என்ற குறைபாடு இருந்தது. அதனை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் கமு/சது/விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கற்று சிறப்பு சித்தியெய்தி முதல் சட்டத்துறை மாணவியாக ஜனுஷா விக்கினராசா தனது பட்டப்படிப்பை நிறைவு செய்து சட்டத்துறையில் பட்டம் பெற்ற முதல் மாணவியாக 7ம் கிராமத்துக்கும், நாவிதன்வெளி பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவர் விக்கினராசா பத்மா தம்பதிகளின் இரண்டாவது மகளாக ஒரு விவசாய குடும்ப பின்னணியை கொண்டவர். இவரது மூத்த சகோதரி அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றுவதோடு இரு இளைய சகோதரர்களும் தற்போது பல்கலைக்கழகத்துக் தெரிவாகியுள்ளனர்.
கல்விக்கு எதுவும் தடையில்லை
முயற்சி எனும் மூலதனம் மட்டுமே போதும் என்பதற்கு சான்றாக திகழ்கிறார் ஜனுஷா.