திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் தவிசாளருமான சந்திரதாஸ கலப்பதி தனது 79 ஆவது வயதில் கொழும்பில் காலமானார்.

திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளருமான சந்திரதாஸ கலப்பதி (Chandradasa Galappaththi) தனது 79 ஆவது வயதில் கொழும்பில் காலமானார்.

இவர் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) சார்பாக திகாமடுல்ல மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குத் தெரிவானவர்.

கிழக்கு மாகாண சபையின் தவிசாளராக (Chairman) பணியாற்றி மாகாண அரசியலில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார்.