கறுவல்தம்பி பிரதீபதாசன் அவர்களுக்கு ‘ஸ்கந்த காவியக்குரலோன்” பட்டம் வழங்கி கௌரவிப்பு!


பெரியநீலாவணை அரசடி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் செயலாளரும், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு தாதிய உத்தியோகத்தருமான கறுவல்தம்பி பிரதீபதாசன் அவர்களின் ஆலயத்தொண்டு, ஆன்மீகப்பணியினை கௌரவித்து ஸ்கந்த காவியக்குரலோன் எனும் பட்டம் ஆலய கும்பாபிஷேக நிகழ்வில் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


இவர் இவ்வாலயத்தின் ஆலய வளர்ச்சிக்கும் ,திருப்பணிக்கும் சுமார் 30 வருடங்களாக செயற்பட்டு வருவதுடன், விரத காலங்களில் ஆலயத்தில் கந்தசஷ்டி கந்த புராணம் பாடுதல், சித்திர புத்திர நாயனார் கதை ,மற்றும் திருப்புகழ் பாராயணம் செய்தல் ,திருப்புகழ் முற்றோதல் ,பாராயணம் செய்தல் போன்ற பல ஆன்மீகப்பணிகளை இவர் சிறப்பாக செய்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.


இந்த கௌரவிப்பு , ஆலய ஆதினகர்த்தாவும், பிரதம குருவுமான சதா ரவிந்தரராஜா அவர்களினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.