பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்ட  கடற்கரையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள்  தேங்கி காணப்படுகின்றன.

டிக்வா புயல் மற்றும் அண்மைய அசாதாரண காலநிலையை தொடர்ந்து கடற்கரையில் இவ்வாறு பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி காணப்படுவதுடன் குறிப்பாக அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக தற்காலிகமான கடலை நோக்கி வெட்டப்பட்ட கால்வாய்கள்  ஊடாகவும்  இவ்வாறான கழிவுகள் அதிகளவாக கடற்கரையில் கரை ஒதுங்கி நிறைந்து காணப்படுகின்றன.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர்   இவ்வாறான கழிவுகள் அதிகளவாக கடற்கரையில் நிறைந்து காணப்படுவதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் பெரிய நீலாவணை, பாண்டிருப்பு, மருதமுனை,  கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர், பாலமுனை, அட்டாளைச்சேனை ,அக்கரைப்பற்று, திருக்கோவில் ,பொத்துவில் , உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான கழிவு அடையாளங்கள் தென்பட்டுள்ளன.

இவ்வாறான கழிவு  பரவலானது     கரையோர மீனவர்களது  மீன்பிடி தொழிலுக்கு பெரும் சிரமங்களை கொடுப்பதுடன் வலைகளிலும் சிக்கி வருகின்றன.

எனவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இவ்விடயத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என பாதிக்கப்பட்ட மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.