என். செளவியதாசன்

இன்று பெரியநீலாவணையில் இரத்ததான முகாம்.
அமர்ர் கணேஸ் தினேஸ் அவர்களின் 7ம் ஆண்டு நினைவாக காவேரி விளையாட்டு கழகத்தின் ஏற்பட்டில் பெரியநீலாவணை இளைஞர்களால் நடாத்தப்படும் மாபெரும் இரத்ததான நிகழ்வு தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுஇன்று காலை 08 மணி தொடக்கம் 04 மணி வரை கமு /கமு சரஸ்வதி வித்தியாலய மண்டபத்தில் இன் நிகழ்வு இடம்பெற இருப்பதனால் அனைவரும் “உதிரம் கொடுத்து உயிர் காப்போம் “ என்ற எண்ண கருவுடன் கலந்து எமது பிரதேச இரத்த தட்டுப்பாட்டினை எம்மால் இயன்றளவு தடுப்போம்…….

இவ் இரத்ததான நிகழ்வில் இரத்த கொடையாளியாக (Donor) கலந்து கொள்ளும் அனைவருக்கும் காவேரி விளையாட்டு கழகத்தினால் நினைவு சின்னம் (memanto) வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு ஆதாரவைத்திய சாலையின் பணிப்பாளர் Dr சுகுணன் அவர்களின் பணிப்புரைக்கு அமைய இரத்த வங்கி பிரிவின் Dr எஸ். எச். எம். வர்ஷாத்,தாதிய உத்தியோகத்தர் சுபோசனா தலமையிலான வைத்திய குழுவினர் இரத்த சேகரிப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.