காரைதீவு  வைத்தியசாலை சர்வ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு  வைத்தியசாலையில் புதிதாக அமையப் பெற்றுள்ள சர்வ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நாளை(6) வெள்ளிக்கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகும்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( 08 )  மகா  கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது என காரைதீவு பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி மருத்துவர் அஜந்தா சுரேஸ் தெரிவித்தார்.

அதேவேளை எதிர்வரும் சனிக்கிழமை(7)  எண்ணைய்க்காப்பு இடம்பெறும்.

கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகம் நிறைவடைந்த பின்னர் திங்கட்கிழமை 09/02/2026இருந்து 19/02/2026 வரை மண்டலாபிசேக பூசைகள் இடம்பெறும்.

 சங்காபிசேகம் 20/2/2026 ல் நடைபெறும். 

 21/2/2026 ம் திகதி வைரவருக்கான பூஜை நடைபெற்று இவ் நிகழ்ச்சி நிரல் இனிதே நிறைவு பெறும் என வைத்தியசாலை பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.