சீடாவின் சமூக சேவைப் பயணம் ஆரம்பித்த நாளிலிருந்து, குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு பல்வேறு அர்ப்பணிப்பான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, களுதாவளை சாஸ்திரியார் வீதியில் அமைந்துள்ள விபுலானந்த வித்தியாலய பாலர் பாடசாலை மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு 28.01.2026 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய மாணவச் செல்வங்களுக்கு இந்நாள் புதிய நம்பிக்கையும் கனவுகளும் நிறைந்த, நினைவுகூரத்தக்க நாளாக அமைந்தது.

அந்நிகழ்வின் போது,மரக்கன்றுகள் – சீடாவின் தனி உறுப்பினர் ஒருவராலும் Whiteboard சீடாவின் மற்றுமொரு உறுப்பினராலும் வழங்கப்பட்டன.
கற்றல் உபகரணங்கள் – சீடாவின் உறுப்பினர்களின் பொது நிதி மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இன்று நாம் விதைக்கும் விதைகளே, நாளைய சமூகத்தின் உறுதியான எதிர்காலமாக மலரும்.

‘ஒரு குழந்தையின் கையில் புத்தகம் கொடுத்தால்,
ஒரு தேசத்தின் எதிர்காலத்தையே ஒளிரச் செய்கிறோம்.’

இந்நிகழ்வை சிறப்பாக முன்னெடுக்க உதவிய அனைத்து சீடா உறவுகளுக்கும், தன்னார்வமாக பங்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.