கல்முனை ஸ்ரீ
சமாதான நீதவான்கள் தங்களது உயிர் வாழ் சான்றிதழினை கிராம பிரதேச செயலாளரின் சேவகர் ஊடாக அத்தாட்சிப்படுத்தலுடன் மார்ச் மாதம் 31 ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டுமென நீதி அமைச்சு அறிவித்துள்ளதுடன் இம்முறை வைத்திய சான்றிதலும் அத்துடன் இணைக்கப்படவேண்மெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இவ்வாறு சமர்ப்பிக்கபடாவிட்டா அவர்களது பதவி இரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டடுள்ளதுடன் புதிதாக சமாதான நீவான்கள் இணைத்துக்கொள்வது தொடர்பான விபரங்களும் 2025 ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமாணியில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது
வைத்திய அத்தாட்சிப் பத்திரம் சமர்ப்பிக்கும்போது அது இலங்கை வைத்திய சபையில் பதிவு செய்யப்பட்ட வைத்தியர் ஒருவரிடம்இருந்து அத பெறப்பட வேண்டுமெனவும் சமாதான நீதவான் சிறந்த தேகாரோக்கியத்துடன் இக்கடமையை நிறைவேறற்றக்கூடிய இயங்கு நிலையில் உள்ளார் என்பதை குறிப்பிட்டு வைத்திய சான்றிதழ் பெறப்பட வேண்டுமெனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை சமாதான நீதவான் ஒருவர் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டிய ஆறு பாடங்களில் ஆங்கில் பாடத்தில் சித்தியடைந்திருந்தால் மாத்திரமே ஆங்கில மொழி மூலமான ஆவணங்களில் ஒப்பமிட வேண்டுமெனவும் அதில் விஷேடமாக தெரிவிக்கப்பட்டுள்ளது