பெரியநீலாவணை ஆலையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆரம்பமான திருவாசக முற்றோதல் நிகழ்வு.
அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு ஜெயராஜி அவர்களின் ஆலோசனைக்கு அமைய பெரியநீலாவணை ஆலையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பரிபாலன சபையின் தலைவர் ச. குமுதன் தலைமையில் இன்றைய தினம் திருவாசக முற்றோதல் நிகழ்வு ஆரம்பமானது.
ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவ ஸ்ரீ த. விஜயவர்ம குருக்கள் அவர்களினால் இன்று காலை விசேட பூசை நிகழ்வுகள் நடைபெற்றது.
தொடர்ந்து திருவாசகம் முற்றோதல் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். திருவாசகம் முற்றோதல் ஆரம்ப நிகழ்வில் ஆலய பரிபாலன சபையின் செயலாளர் திரு த. ஐங்கரன் மற்றும்
ஓய்வு நிலை ஆசிரியர் ஆலோசகர்(தமிழ்) திரு க.குணசேகரம் அவர்களும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திருபுண்யமூர்த்தி கருணாகரன் (சங்கீதம் ) மூதூர் கல்வி வலயம். அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகம் அவர்களும் மற்றும் பெரியநிலாவணை தெய்வச் சேக்கிழார் அறநெறிப் பாடசாலை மாணவர்கள். ஆசிரியர்கள் மற்றும், பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.




















