“சுனாமி” 21 ஆண்டு நிறைவை  முன்னிட்டு சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில்  மையோன் சமுக சேவை அமைப்பு, மையோன் குரூப், மற்றும் யுனைடெட் பவர் கவுஸ் ஆகியவற்றின் அனுசரணையில் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம்  இன்று(27)  சனிக்கிழமை காலை  சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது


இதில் இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்கள் அதிகம் அதிகம் கலந்து கொண்டு இரத்தத்தினை    தானம் செய்தமையை காண முடிந்தது.

 “ஓர் உயிரை வாழவைத்தவர் எல்லா உயிர்களையும் வாழவைத்தவர் போல் ஆவார்” எனும் ஹதீஸிற்கிணங்க சகலருக்கும் குருதிக்கொடை வழங்க சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.