காரைதீவில் அதிகாலை திருவெம்பாவை ஊர்வலம் 

(வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவுஇந்து சமயவிருத்திச்சங்கம் வருடாவருடம் நடாத்திவரும்  திருப்பள்ளிஎழுச்சி திருவெம்பாவை ஊர்வலமானது கடந்த 25 ஆம் திகதி முதல் தினமும் அதிகாலையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தினமும் அதிகாலை 4 மணியளவில் காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து ஊர்வலம் ஆரம்பமாகி ஆலயமொன்றில் திருவெம்பாவை பாடுதலுடன் நிறைவடையும். தொடர்ந்து திருவாசக முற்றோதலும் இடம்பெறும்.

எதிர்வரும் ஜனவரி  03 ஆம் திகதி சனிக்கிழமை திருவாதிரை தீர்த்தமத்துடன் திருவெம்பாவை நிறைவடையும் என சங்கச் செயலாளர் கு.ஜெயராஜி தெரிவித்தார்.