( வி.ரி. சகாதேவராஜா)

மலையக பகுதிகளில் மண் சரிவினால் வீதிகள் பொதுவாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனால் போக்குவரத்தும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

அருகிலுள்ள மலைகள் மற்றும் கிறவல்மண்தி ட்டுகள் மழையில் கரைந்து வீதியை மூடுகின்றன.

நுவரெலியா வெலிமட போன்ற இடங்களில் சில வீதிகள் தாழிறங்கி உள்ளன.

மேலும் கண்டி கம்பளை பூண்டுலோயா நுவரெலியா பதுளை வெலிமடை போன்ற இடங்களில் பரவலாக வீதிகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன .

இருந்த பொழுதிலும் வீதி அபிவிருத்தி ,அதிகார சபையினர் போக்குவரத்தை சீர்செய்யும் வண்ணம் ஆங்காங்கே கனரக வாகனத்தில் துணைகொண்டு சீர் செய்து வருவதையும் காணக் கூடியதாக இருக்கின்றது .

எனினும் சமகால மழை மேலும் பாதைகளை மற்றும் பயணங்களை  பாதிக்கலாம் என அஞ்சப்படுகிறது.