யாழ் அரியாலை கிழக்கு பூம்புகார் சண்முகா முன்பள்ளி பாடசாலையில் கல்வி பயிலும் பதினாறு சிறு வயதை உடைய மாணவர்களுக்கும், இரு
ஆசிரியைகளுக்கும் கனடாவிலும் தாயகத்திலும் தொடர்ச்சியாக பல்வேறுவிதமான உதவிகளை வழங்கிவரும் உதவும் பொற் கரங்கள் அமைப்பின் தலைவர் திரு விசு கணபதிப்பிள்ளை (CEO & President of Helping Golden Hands, Canadian Foundation) அவர்களின் அனுசரணையில் மானிய ஊக்குவிப்பு தொகையாக நாற்பதாயிரம் நிதித் தொகையினை சமூகத் தலைவரும் பூம்புகார் சனமுக நிலையத்தின் தலைவருமான அமல்காந் ஸ்ரீகாந்த் அவர்களின் ஒருங்கிணைப்பில் (11) வழங்கப்பட்டன. சங்க சனசமூக நிலையத்திற்கு உதவும் பொற்கரங்கள் அமைப்பு தொடர்ச்சியான உதவிகளை வழங்க வருவது குறிப்பிடத்தக்கது.