இன்று கதிரவனின் 2500வது “தூய இலங்கை” வீதி நாடகம் காரைதீவில்..
கல்வி நிவாரணப் பணிக்கு உதவிகள் குவிந்தன!
( வி.ரி. சகாதேவராஜா)
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாடறிந்த கதிரவன் கலைக் கழகத்தின் “தூய இலங்கை”( க்ளீன் ஸ்ரீலங்கா- clean srilanka) வீதி நாடகம் இன்று (11) வியாழக்கிழமை காரைதீவு பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.
நாடறிந்த கதிரவன் கலைக் கழகத்தின் 2500 ஆவது வீதி நாடகம் இதுவாகும் .
தூய இலங்கை க்ளீன் ஸ்ரீலங்கா என்ற தொனிப்பொருளில் கதிரவன் கலைக்கழகத் தலைவர் த. இன்பராசா தலைமையிலான குழுவினரின் வீதி நாடகம் ஒரு மணி நேரம் நடைபெற்றது. பார்த்தவர்கள் அனைவரும் வயிறு குலுங்க சிரித்து மகிழ்ந்தார்கள்.
காரைதீவு பிரதேச செயலாளர் ஜீ.அருணன் ,உதவி பிரதேச செயலாளர் எஸ். பிரணவரூபன், கணக்காளர் திருமதி ஏஎல்.பாத்திமா றிம்ஷியா மற்றும் செயலக உத்யோகத்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
கதிரவன் கலைக் கழகத்தின் தலைவர் த. இன்பராசா விளக்க உரை நிகழ்த்த, ஓய்வு நிலை உதவி கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி விரி.சகாதேவராஜா நன்றியுரையாற்றினார்.
இறுதியில், கதிரவன் கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் மண்சரிவு புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் சேகரிக்கும் பணியும் இடம்பெற்றது .பலரும் கற்றல் உபகரணங்களை வழங்கினார்கள்.












