நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 06 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பின்வரும் மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை (வெளியேற்றல் அறிவிப்பு) விடுக்கப்பட்டுள்ளது:

பதுளை மாவட்டம்: பதுளை, ஹப்புத்தளை, ஹாலிஎல, கந்தகெட்டிய, பசறை, மீகஹகிவுல, ஊவ பரணகம, வெலிமட, லுணுகலை, எல்ல, பண்டாரவளை, சொரணாதோட்டை மற்றும் ஹல்துமுல்ல.

கண்டி மாவட்டம்: உடபலாத, கங்கவட்ட கோரளை, உடுதும்புர, தொழுவ, மினிபே, பாதஹேவாஹெட்ட, மெததும்புர, தெல்தோட்டை, அக்குரணை, கங்க இஹல கோரளை, பாததும்புர, யட்டிநுவர, தும்பனே, உடுநுவர, ஹாரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய, பஸ்பாகே கோரளை, பன்வில, ஹதரலியத்த மற்றும் குண்டசாலை.

கேகாலை மாவட்டம்: மாவனெல்லை, ரம்புக்கனை, அரநாயக்க, புளத்கொஹுபிட்டிய, கலிகமுவ, கேகாலை, யட்டியாந்தோட்டை, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, வரக்காபொல மற்றும் தெரணியகல.

குருநாகல் மாவட்டம்: ரிதிகம, மாவத்தகம, மல்லவபிட்டிய, நாரம்மல, அலவ்வ மற்றும் பொல்கஹவெல.

மாத்தளை மாவட்டம்: நாவுல, ரத்தோட்டை, அம்பன்கங்க கோரளை, உக்குவளை, வில்கமுவ, யட்டவத்த, மாத்தளை, பல்லேபொல மற்றும் லக்கல-பல்லேகம.

நுவரெலியா மாவட்டம்: வலப்பனை, ஹங்குரன்கெத்த, நில்தண்டாஹின்ன, மத்துரட்ட, நுவரெலியா, கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு, அம்பகமுவ, தலவாக்கலை மற்றும் நோர்வூட்.

இதேவேளை, பின்வரும் மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் மட்ட மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:

கொழும்பு மாவட்டம்:

* பாதுக்கை

* சீதாவக்க

கம்பஹா மாவட்டம்:

* அத்தனகல்ல

இரத்தினபுரி மாவட்டம்:

* கிரியெல்ல

* இரத்தினபுரி

* எஹெலியகொடை

* குறுவிட்ட

* கொலன்ன

* எலபாத்த

* அயகம

* பலாங்கொடை

* கலவான

* இம்புல்பே

* கஹவத்தை

* நிவித்திகல

* ஓப்பநாயக்க

* கொடகவெல

* பெல்மடுல்ல