நான்காவது மாத கொடுப்பனவையும் மரணவீட்டுசெலவுக்காக கையளித்தார் நாவிதன்வெளி பிரதேசசபை உபதவிசாளர்
கு. புவனரூபன்
வீரச்சோலை கிராமத்தை சேர்ந்த அரன் என்பவர் நேயினால் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடைய ஒரு கால் இல்லாத நிலையில் வறுமையில் வாழ்ந்துவந்தார்
அவர் 2025ஃ10ஃ15அன்று இறந்த சோகமான செய்தியை இந்த கிராம சமூக அக்கறை உடையவர்கள் தெரியப்படுத்தியதை அடுத்து உடனடியாக மரணவீட்டுக்கு சென்று தனது நான்காவதுமாத கொடுப்பனவு 20000ஃ ரூபாயை மரணசெலவுக்காக வீரச்சோலை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய தலைவரிடம் நாவிதன்வெளி பிரதேச சபை உப தவிசாளர் குணநாதன் புவனரூபன் வழங்கிவைத்தார்.
இவர் தனது மாதாந்த கொடுப்பனவை பொதுத் தேவைக்கு அன்பளிப்பு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

