கணேசாவிற்கு ஒரு லட்சம் ரூபாயை அன்பளித்த பரோபகாரி விஜீவா
( காரைதீவு சகா)
சம்மாந்துறை வலயத்தில் உள்ள நாவிதன்வெளி ஏழாம் கிராமம் கணேசா வித்தியாலயத்திற்கு அண்மையில் விஜயம் செய்த சுவிட்சர்லாந்தில் வாழும் பாண்டிருப்பைச்சேர்ந்த பரோபகாரி. திருமதி குபேரலட்சுமி விஜயகுமாரன் (விஜீவா) (மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டிற்கு ஒரு லட்சம் ரூபாயை வழங்குவதாக உறுதியளித்தார்.
அத் தொகையை பரோபகாரி ஜீவா விஜி தம்பதியினரின் சார்பில் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா வித்தியாலய அதிபர் திருமதி கார்த்தியாயினி துரைலிங்கத்திடம் வழங்கினார்.
அவர் அங்கு ஏலவே மாணவி ஒருவருக்கு துவிச்சக்கர வண்டியை அன்பளிப்பு செய்திருந்தார் என்பதும் அவ்வேளையில் ஒரு லட்சம் ரூபாயை வழங்குவதாக உறுதியளித்தமையும் குறிப்பிடத்தக்கது.
அச் சமயத்தில் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் செ. மகேந்திரகுமாரும் சமூகமளித்திருந்தார்.


