எதிர்வரும் தமிழ் சிங்கள புது வருடமளவில் புறக்கோட்டை பஸ் நிலையத்தை நவீன மயப்படுத்தும் பணிகளை நிறைவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தை நவீன மயப்படுத்தும் பணிகளை ஆரம்பிப்பதற்காக இன்று (15) நடைபெற்ற உத்தியோப்பூர்வ நிகழ்வில் கலந்துகொண்ட போக்குவரத்து அமைச்சர் இதனை குறிப்பிட்டார். 

பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தும் பணிகள் தற்போது அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 60 வருடங்களாக படங்களாக இங்கு எவ்வித சீர்திருத்தங்களும் இடம்பெறவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

பொதுப் போக்குவரத்தை முன்னேற்றாது விடுவதனால் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் முன்னேற்ற முடியாது என சுட்டிக்காட்டிய அமைச்சர், இலஞ்சம், ஊழல் நிறுவனத்தினால் தாங்கிக் கொள்ள முடியாதவாறு ஊழியர்களின் எண்ணிக்கை, கருத்திற் கொள்ளப்படாமையினால் இந்த நிறுவனம் கடந்த 50, 60 வருடங்களாக பொதுப் போக்குவரத்து கட்டமைப்பு வீழ்ச்சியடைந்து காணப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.