-சௌவியதாசன்-
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அபுபக்கர் நேற்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு விஜயம் செய்து கிராமத்தில் உள்ள உட்கட்டமைப்பு குறைபாடுகள், மக்கள் தேவைகள் தொடர்பாக கேட்டறிந்தார். இதன் போது உடனடியாக சில விடங்களுக்கு தீர்வு காண உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு குறித்த விடங்களை தெரியப்படுத்தினார்.
உனடியாக திருத்தம் செய்ய வேண்டிய வீதிகள் தொடர்பாகவும் நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். சேனைக்குடியிருப்பு கிராமத்தில் இயங்கா நிலையில் உள்ள ஆயுர்வேத மருந்தகத்தை இயங்கவைப்பது தொடர்பாகவும் உரிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார்.
பெரியநீலாவணை வீட்டுத் திட்டத்தில் நீண்ட காலமாக காணப்படும் கழிவு நீர் பிரச்சனை மற்றும் அதற்கான வடிகான் சீரமைத்தல் தொடர்பாகவும் ஆராய்திருந்தார். அவருடன் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களும் உடன் சென்றிருந்தனர்.அத்துடன் பெரியநீலாவணை கிராமத்தில் காணப்படும் உட்கட்டமைப்பு குறைபாடுகள் தொடர்பாகவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தேசிய மக்கள் சக்தியின் கிராம செயற்பாட்டாளர்களிடம் உறுதியளித்திருந்தார்.








