அமெரிக்காவின் கலிபோர்னியாவை தளமாகக்கொண்டியங்கும் ”முயற்சியே உன் வளர்ச்சி, கல்விக்கும் வாழ்வுக்கும் கரம் கொடுப்போம்” என்கின்ற தாரக மந்திரத்தோடியங்கும் அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம் (இது இலங்கையின் அரச சட்டதிட்டங்களுக்கு அமைவாக பதியப்பட்டது)
SCSDO கடந்த 31.08.2025. ஞாயிறன்று வவுனியா மாநகரசபை மண்டபத்தில் அதன் நிறுவுனர்,தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.திருக்கேதீஸ்வரன் குருசாமி(BABBA கலிபோர்னியா பல்கலைக்கழகம் அமெரிக்கா) தலைமையில் வடக்கு கிழக்கு தெற்குப்பகுதிகளிலிந்து தேர்ந் தெடுக்கப்பட்ட 30 மூத்த இளைய பன்முகப் பேராளுமைகள் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
முன்னதாக பிரதம விருந்தினர்கள் மற்றும் விழா நாயகர்கள் முழவு, முரசு முழங்க பிரதான வாயிலில் இருந்து மண்டபத்திற்குள் அழைத்து வரப்பட்டனர்.அரங்க நிகழ்வாக திரு.திருக்கேதீஸ்வரன் குருசாமி அவர்களது தலைமையில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.நிகள்வின் தொகுப்பை மூத்த ஊடகர்,அறிவிப்பாளர் திரு.கியூ லோறன்ஸ் தெனாறன்ஸ் ஏற்க தமிழ்த்தாய் வாழ்த்தை செல்வி.பிரணவன் தேஜஸ்வினியும் செல்வி.ஜெயசீலன் கில்மிசாவும்(2023.சரிகமபா வெற்றியாளர்)நிகழ்த்தினர்
வரவேற்பு நடனத்தை ஆசிரியர் கலைமணி திருமதி.நிக்சன் பிரியங்கா அவர்களின் சிதம்பரேஸ்வரம் நடனாலய மாணவிகள் அரங்கேற்றினர்.வரவேற்புரையை திருமதி.சுபாசினி பிரணவனும்(இசையாசிரியர் இயக்குனர் தேஜஸ்வரா கலைக்கூடம் கொழும்பு.SCSDO வின் இசைத்துறை இனைப்பாளர்)தலைமையுரையை இலங்கைக்கான SCSDO வின் இனைப்பாளர் திரு.சுப்பிரமணியம் ஜெயச்சந்திரனும் (முகாமையாளர்,ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம்,புளியங்குளம்) நிகழ்த்த
ஆளுமைகள் மதிப்பளிப்பு ஆரம்பமானது
தலைவர் உட்பட சிறப்பு,மற்றும் முதன்மை விருந்தினர்கள் ஆளுமைகளுக்கு மதிப்பளித்து விருதுகளை வழங்கினர்.
ஒவ்வொரு சாதனையாளருக்கும் அவரவர் கலைத்துறை வாழ்வுக்கால சாதனைகள் தனித்தனி ஒளி ஒலி ஆவணமாக தயாரித்து அரங்கில் ஒளிபரப்பப்பட்டது.இன் நிகழ்வின் விருந்தினர்களாக திரு.P.A.சறத்சந்திர (மாவட்டச்செயலாளர் வவுனியா)
முனைவர் அ. நசீமா (MA,MPHIL,MBA,PHD) உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை
தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் சுகிசடோ தமிழ்நாடு இந்தியா.
திரு.ப.கார்திகேயன் இயந்திரமனிதனாக்குணன்
எந்திரி தமிழ்நாடு இந்தியா.
திரு.தெய்வேந்திரம் ரதீஸ்குமார்
உள்ளூராட்சி உதவி ஆனையாளர்
வவுனியா.
திரு.தி.திரேஸ்குமார்
மேலதிக பணிப்பாளர் நாயகம்
தேசிய வரவு செலவு திட்ட தினைக்களம் கொழும்பு.
திரு.நாகலிங்கம் கமலதாசன்
மேலதிக மாவட்டச்செயலாளர் வவுனியா.
திரு.இந்திரராஜா பிரதாபன்
பிரதேச செயலாளர் வவுனியா.
திரு.து.லெனின் அறிவழகன்
வலயக்கல்விப்பணிப்பாளர்
வவுனியா வடக்கு.
திரு.தர்மலிங்கம் முகுந்தன் வலயக்கல்விப்பணிப்பாளர்
வவுனியா தெற்கு ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நன்றியுரையை SCSDO வின் இலங்கைக்கான இலக்கியத்துறை இணைப்பாளர் திருமதி.பத்மாவதி ஜெயச்சந்திரன் (விரிவுரையாளர் வவுனியா தேசிய கல்வியற்கல்லூரி)நிகழ்த்தினார்.
அரங்க ஒருங்கமைப்பை மட்டக்களப்பு பிராந்தியSCSDOவின்
ஒருங்கமைப்பாளர் திருமதி. கவிமகள் ஜெயவதியும்
அம்பாறை மாவட்ட SCSDOவின் இனைப்பாளர் திருமதி. ஜெனிதா மோகனும்
(மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்)நெறிப்படுத்தினர்.
விருது பெற்ற மூத்த இளைய ஆளுமைகள்.1) பெரியதம்பி செல்லக்குட்டி. முல்லைத்தீவு 2)மா.இரத்தினசோதி. யாழ்
3)ஜெகதீஷ்வரி நாதன். அம்பாறை
4)காளிக்குட்டி சந்திரலிங்கம். அம்பாறை
5)உடுவிலூர் கலா. யாழ்
6)தர்சிகா குலதாசன். யாழ்
7)இராமநாதன் கோகுலன் முல்லைத்தீவு.
8)நளினி இரத்னராஜா.மட்டக்களப்பு.
9)வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளை.யாழ்
10)வாசுகி வாசு.கொழும்பு.
11)திருமலைச்சந்திரன்.திருகோணமலை.
12)கனேசசுந்தரன் சிறீகுகன்.யாழ்
13)இ.சிவரமணி.திருகோணமலை.
14)த.சுசேந்தன்.மட்டக்களப்பு.
15)சங்கரி சிவகனேசன்.யாழ்.
16)ஜெ.தஸ்விகா.யாழ்
17)சி.விமல்ராஜ்.யாழ்.
18)தம்பிராசா பூபாலசிங்கம்.மட்டக்களப்பு.
19)சு.ஜெயராசசிங்கம்.முல்லைத்தீவு.
20)டானியல் அமல்ராஜ்.யாழ்.
21)ஜெராட் நோயல்.யாழ்
22)ந.பரமேஸ்வரன்.யாழ்.
23)செ.சாந்தகுமார்.கிளிநொச்சி.
24)கயல்விழி கொலின் பாஸ்கரன்.மன்னார்.
25)ம.திருச்செல்வம்.திருகோணமலை.
26)கார்த்திகேசு.அம்பாறை.
27)சகதீசன்.யாழ்.
28)உ.கிரிஜன்.யாழ்
29)தவபாலன்.வவுனியா.
30)அ.ரகிநாத்.முல்லைத்தீவு.
SCSDO.அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் பிரதான செயற்பாடு கல்வி கற்கக்கூடிய ஆற்றல் இருந்தும் வசதியற்றிருக்கும் மாணவர்களுக்கு பாலர் வகுப்புத்தொடக்கம் பல்கலைக்கழகம் வரை கற்க உதவுதல் இதர செயற்பாடுகள் வாழ்வாதார உதவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஊட்டச்சத்துள்ள உணவுப்பொருட்களை வழங்குதல் சிறந்த வளவாளர்களைக்கொண்டு
புலமைப்பரிசில் மாணவர்களுக்கும் க.பொ.த.சா.மற்றும் உயர்தர மாணவர்களுக்கும் வகுப்புகளை நடாத்துதல் மாணவர்கள் மத்தியில் அறிவியல் வினாடிவினாப்போட்டிகளை நடாத்தி பரிசில்களையும் சான்றிதல்களையும் வழங்குதல்
பாடல் போட்டிகளை நடாத்தி சிறந்த பாடகர்களைத்தேர்தெடுத்து இலட்சத்திற்கும் அதிகமான பணப்பரிசுகளையும் நினைவுக்கேடயங்களையும் வழங்கி ஊக்குவிப்பதோடு அவர்களது திறைமையை நாடறியச் செய்துள்ளதுடன் கலைஞர்களின் ஆக்கங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளது.
இதில் மிக மிக முக்கியமான விடையம் என்னவென்றால் இதில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் அனைத்திற்கும் யாரிடமிருந்தும் எந்த விதமான நிதியும் பெற்றுக்கொள்ளப்படுவதில்லை தனியொரு மனிதரான திரு.திருக்கேதீஸ்வரன் குருசாமி அவர்களுடைய சொந்த நிதிப்பங்களிப்புடனேயே இடம் பெறுகின்றதென்றால் அது மிகையல்ல நன்றி.தொகுப்பு மூத்த அறிவிப்பாளர் ஊடகர் கியூ லோறன்ஸ் தெனாறன்ஸ்.








































































