மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைபெருநிலம் அம்பிளாந்துறை முச்சந்தி முத்துலிங்கப்பிள்ளையார் ஆலயத்தில் புனருத்தாரண மகா கும்பாபிசேகம், மண்டலாபிசேக பூசைகள் 12, தினங்கள் நிறைவடைந்து சங்காபிசேகம் சிறப்புற பக்திபூர்வமாக சிவஶ்ரீ செ.கு.உதயகுமார் குருக்கள் தலைமையில் நேற்று(25.07.2025) நடந்து முடிந்தது.
இதன்போது அம்பிளாந்துறை ஶ்ரீ சித்திவினாயகர், மாரியம்மன் ஆலயத்தில் இருந்து பால்குடப்பவனியாக எடுத்துவரப்பட்டு முத்துலிங்கப்பிள்ளையாருக்கு 108, குடங்களால் பாலாபிசேகமும், 108, சங்குகளால் சங்காபிசேகமும் இடம்பெற்றது.
பெரும்திரளான அடியார்கள் கலந்து சிறப்பித்தன.











