கிழக்கு மாகாண வரலாற்றில் முதல் தடவையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிட்சை கடந்த (15) திகதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.கலாரஞ்சனி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம் பெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிரேஸ்ட பொது வைத்திய நிபுணர் எஸ்.மதனழகன் உள்ளிட்ட குறித்த அறுவைச் சிகிச்சையினை மேற்கொண்ட வைத்திய அதிகாரிகளும் இதன் போது குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
உயிருடன் உள்ள நன்கொடையாளரின் சிறுநீரகத்தினை பெற்று 45 வயதுடைய நோயாளருக்கு சீறுநீரக மாற்று சிகிச்சையினை தாம் மேற்கொண்டுள்ள்தாகவும், சத்திர சிகிச்சையின் பின் இருவரும் சிறந்த தேக ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் அவர்கள் சிகிச்சை பெற்று (21) திகதி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இப் பாரிய சத்திர சிகிச்சைக்காக 3 பிரதான குழுவாக பிரிந்து இச் சிகிச்சையை வழங்கியுள்ளதுடன், முதலாவது குழுவினர்கள் நன்கொடையாளரையும் அவயம் பெறுநரையும் பராமரித்ததுடன், சத்திர சிகிச்சை அணியினர் மற்றும் மயக்க மருத்து வழங்கும் குழுவினருடன் மேலும் வெளி மாவட்டங்களை ச் சேர்ந்த வைத்தியர்கள், தாதியர்கள், மற்றும் உதவியாளர்கள் பங்களிப்புடன் சுகாதார அமைச்சின் செயலாளர் அவர்களின் அனுமதியுடன் இடம் பெற்றது எனவும் இதற்காக உதவிய நன்கொடையாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
தொடர்ச்சியாக பராமரிப்பதற்கு வழங்குவதற்கு தேவையா நடவடிக்கைள் இவர்களுக்காக மேற்கொள்ளப்படவுள்ளதுடன், மாவட்டத்தில் அங்க அவையங்களை தானம் செய்வதற்கு மக்கள் முன் வர வேண்டும் என இதன் போது வைத்திய அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
போதனா வைத்தியசாலையில் 1,500 பாரிய சத்திர சிகிச்சையும் 12500 சிறிய சத்திர சிகிக்சையும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.