செல்லையா  பேரின்பராசா 

அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநித்துவதை இம்முறை தக்கவைத்துக் கொள்ள முடியுமா என் கேள்விக்குறி உருவாகியுள்ளது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கட்சிவாத அரசியல் போக்கும் சுயநலவாதமுமே இதறகுக் காரணமாகும் எனவே எமது அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்காக எம்.ஏ..சுமந்திரனால் வாக்குகளைச் சேகரிக்க களமிறக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் தரப்பை விரட்டியடித்துவிட்டு தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சங்கு சின்னத்திற்கு அமோக ஆதரவை அளித்து எமது தமிழ் பிரதிநிதித்துவத்தை அம்பாறையில் பாதுகாக்க உறுதி பூணவேண்டும்.

இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான இரா.துரைரெட்ணம் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு  வவுணதீவில் 21.10.2024 மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் மேலும் பேசுகையில்.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழ் அரசியல் பரப்பில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் புரிந்துணர்வுடனும் விட்டுக் கொடுப்புடனும் உறுதியுடன் செயற்பட்ட வேளையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டும் குறிப்பாக சுமந்திரன் அணி சுயலாபத்துடன் செயற்பட்டதால் ஏனைய தமிழ் தேசியக் கட்சிகள் சங்கு சின்னத்தில் களமிறங்கும் நிலை ஏற்பட்டது 

இன்று  இலங்கை தமிழரசுக் கட்சி அதிகார மோகம் கொண்டவர்களால் பல கூறுகளாக உடைந்து நீதி மன்றம் வரை சென்றுள்ளதால் இவர்களுக்கு வாக்களிக்க விரும்பாத நிலையில் உள்ளதை மக்கள் பகிரங்கமாக கூறுகின்றனர்.

எனவே எமது இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கூடிய அரசியல் சக்தியாக பரிணமித்துள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் அவர்களின் சின்னமாகிய சங்கு சின்னத்திற்கும் வாக்ககளிக்க உறுதி பூண்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த மட்டில்  ஐந்து பாராளுமன்ற பிரதிநிதித்துவம் உண்டு  இதில் விகிதாசார அடிப்படையில் தமிழ் மக்கள் நான்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற வேண்டும்.

எனவே எமது மக்கள் தேசிய இனப் பிரச்சினை தொடர்பாகவும் மட்டக்களப்பு மாவட் அபிவிருத்தி தொடர்பாகவும் நன்கு அறிந்து செயலாற்றக் கூடிய அணியாக வரம் வரும்  ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் அதன் சின்னமாகிய சங்கு சின்னத்திற்கும் ஆணை வழங்க வேண்டும் என்றார்.