வி.ரி.சகாதேவராஜா

வரலாற்றில் முதல் தடவையாக நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா நாளை (07) புதன்கிழமை நடைபெறவுள்ளது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் முன்னிலையில் ஆலயகுரு சிவஸ்ரீ ச.கோவர்த்தன சர்மா தலைமையில் ஆடிப்பூரத் திருவிழா நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று ஆலய பரிவான சபை
தலைவர் கலாநிதி கே.ஜெயசிறில் தெரிவித்தார்.
இதேவேளை நாளை மறுதினம் (8) வியாழக் கிழமை நாக சதுர்த்தி விசேட பூஜையும் அங்கு இடம் பெறவுள்ளது.

You missed