இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர்கே. அண்ணாமலை இலங்கை தமிழ் எம்பிக்களுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
மேற்படி சந்திப்பு திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாணஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.


இதன்போது அவர்இ நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரை சந்தித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்கால அரசியல் கள நிலவரம் உள்ளிட்டபல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.


கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் சம்பந்தனின் இறுதிக்கிரியை நிகழ்வில் கலந்துகொள்ளவதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலை வர் கே. அண்ணாமலை இலங்கைவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது