இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் புகழுடல் யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில் இன்று மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.


காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சம்பந்தனின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்த முடியும் என்று தமிழரசுக் கட்சியினர் அறிவித்துள்ளனர்.
அதற்கு முன்னர் இன்று காலை 9 மணி முதல் 10 மணிவரை யாழ். மார்டீன் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சம்பந்தனின் புகழுடல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.


அன்னாரின் புகழுடல் இன்று காலை கொழும்பில் இருந்து யாழ். பலாலிக்கு விமானம் மூலம் எடுத்து வரப்படுகின்றது.