கடுமையான சுகயீமடைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு விடுமுறை வழங்க பாராளுமன்றம் அனுமதி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமானகஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இரத்த புற்று நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார் இந் நிலையில் பாராளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு அவருக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபே வர்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன்
கிரியெல்லவினால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கான விடுமுறை
முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அவர் பூரண குணமடைந்து திரும்ப அனைவரும் பிரார்த்திப்போம்..