நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு  தெரிவித்துள்ளது.

இந் நிலையில். கொழும்பு (Colombo), கம்பஹா (Gampaha), இரத்தினபுரி (Rathnapura) உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் மீண்டும் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், 18 மாவட்டங்களில் எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

இதனால் முடியுமானவரை சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.