மார்ச்- 12 இயக்கத்தின் ஏற்பாட்டில்’தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம்’ எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பில் இடம்பெற்ற செயலமர்வு

மார்ச்- 12 இயக்கத்தின் ஏற்பாட்டில்’தூய்மையான அரசியலுக்கான ஒன்றிணைவோம்’ எனும் தொனிப் பொருளில் செயலமர்வு நேற்று (26) மட்டக்களப்பு கல்லடி கிறீன்கார்டன் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

இச்செயலமர்வில் ஆன்மீகத்தலைவர்கள்இ சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், நலன்விரும்பிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.இதன்போதுபதினொரு அரசியல்கட்சிகளின் பிரமுகர்கள் கலந்து
கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

இக்கருத்தரங்கில் முன்னாள்மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்,முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரத்தினம் மற்றும் பூபாலபிள்ளை பிரசாந்தன், முன்னாள் கிழக்குமாகாண சபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, சமூக செயற்பாட்டாளர் இ.மோகன் உட்பட பலர்
பங்குபற்றியிருந்தனர்.