அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கடற்கரை பகுதியில் இல்மனைற்று அகழ்வினை தடுப்பதற்கான எதிர்ப்புப்போராட்டம் நேற்று காலை திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரச்சந்தியில் நடைற்றது.

அங்கிருந்து பிரதேச செயலகம் வரை நடைபவணியாகச் சென்று பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினுடைய பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் புஷ்பராஜ் துஷானந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோரும் பொதுமக்களும் இணைந்து இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்