கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்  இடம்பெற்ற சம்பவத்தை பல்வேறு ஊடகங்கள் திரிபுபடுத்தியமை தொடர்பில் அம்பாறை மாவட்ட செயலாளர் தெரிவித்த கருத்து.

(பாறுக் ஷிஹான்)

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்  இடம்பெற்ற சம்பவத்தை பல்வேறு ஊடகங்கள் திரிபுபடுத்தியுள்ளதாக  அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் 

கல்முனை வடக்கு  பிரதேச செயலகத்தில்  நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும் பிரதேசத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கடந்த வியாழக்கிழமை  (19) அம்பாறை மாவட்ட செயலாளராகிய எனது  தலைமையில் கல்முனை வடக்கு உ செயலகத்தில் கலந்துரையாடப்பட்டது.

இதற்காக அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து  தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண  என்னிடம்  கோரிக்கை வைத்தனர்.

ஆனால் எனது விஜயத்தை பல்வேறு ஊடகங்களில் வெளியாகும் செய்திகளினால் திரிவு படுத்தப்பட்டுள்ளதாகவும் இச்செய்திகள் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நிர்வாகப் பிரச்சினைகளுக்கும் இடையூறாக உள்ளதனால் இவ்வாறான செய்திகளை  திரிவு படுத்தி வெளியிடப்படுவது ஊடகங்களுக்கு அழகில்லை என   அம்பாறை மாவட்ட செயலாளர் கருத்து தெரிவித்தார்.