-தா. பிரதீவன் –

திருக்கோவிலைச் சேர்ந்த கார்த்திகேசு எனும் கூலித் தொழிலாளி ஒருவர் திருக்கோவில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்தபோது அக்கரைப்பற்று பஸ் நிலையத்திற்கு முன்னால் தன் கண்ணில் புலப்பட்ட தங்க ஆபரணங்களைக் கையிலெடுத்து
மற்றவர்களின் பொருட்கள் தனக்குச் சொந்தமில்லை என்று கருதி
உரிய பொருட்கள் உரியவர்களிடம் சென்றடைய வேண்டும் எனும் உயர்ந்த பண்போடு குறித்த நகையை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களிடம் கையளித்துள்ளார்.

திருக்கோவிலைச்சேர்ந்த கார்த்திகேசு எனும் கடவுள் மனசுக்காரனுக்கு எமது வாழ்த்துகள்.

இந்த நற்செயலை செய்த
கார்த்திகேசு அவர்களை கௌரவித்து வாழ்த்துகளும் கூறிப் பாராட்டிய அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கும்
நன்றிகள்.