பட்டிருப்பு கல்விவலய சித்திரப்பாட ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திச்செயலமர்வு

கலைஞர்.ஏஓ.அனல்

பட்டிருப்பு கல்விவலய சித்திரப்பாட ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திச்செயலமர்வானது சித்திர பாட ஆசிரிய ஆலோசகர் திரு.பு.சிறிகாந் தலைமையில் களுவாஞ்சிக்குடி
ஆசிரியர் வாண்மை விருத்தி மத்தியநிலையத்தில் 15.09.2023 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தரம் – 10 தொடக்கம் தரம் 13 வரை சித்திரப்பாடம் கற்பிக்கின்ற
ஆசிரியர்கள் கலந்துகொண்ட இச்செயலமர்விற்கு வளவாளர்களாக ஓய்வு மூப்பு பெற்ற திரு. க.சுந்தரலிங்கம் (உதவிக் கல்விப் பணிப்பாளர் – அழகியல்) மற்றும் திரு.ஏ. ஜெயவரதராஜன் ( ஆசிரிய ஆலோசகர் – சித்திரம்) ஆகிய இருவரும் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கான வரைதல் பயிற்சி மற்றும் வர்ணம் பயிற்சிகளையும் வழங்கியிருந்தனர்.

இதன்போது பட்டிருப்பு கல்வி வலயத்துக்குற்பட்ட பாடசாலைகளில் நடைபெற்று முடிந்த முதலாம் தவணைக் பரீட்சையில் சித்திர பாடத்தில் பெற்ற புள்ளிகளின் பகுப்பாய்வுகள் மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக அதற்கான மேம்பாட்டு அபிவிருத்தி திட்டங்களை பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தி சித்திரப் பாடத்தின் அடைவு மட்டத்தை உயர்த்த வேண்டும் என பட்டிருப்பு கல்வி வலயத்தின் மாணவர் கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு ஜீவானந்தராஜா அவர்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.