தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுவரும் நிலையில் தீர்க்கமான ஒரு முடிவை எடுக்கும் நிர்ப்பந்ததிற்குள் நாங்க ள் தள்ளப்பட்டிருக்கின்றோம் என அரசுடனான பேச்சுவார்த்தையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசுக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு 08.06.2023 மாலை ஜனாதிபதி செயலகத் தில் இடம்பெற்றது. சுமார் ஒன்றரை மணிநேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலை வர் இரா.சம்மந்தன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், கலையரசன், சாள்ஸ் நிர்மலநாதன் சி.சிறீதரன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனராதிராஜா, ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போதே இரா.சம்மந்தன் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து மேலும் அவர் குறிப்பிடுகையில்;

நாங்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறோம் இனியும் ஏமாந்துபோக தயாராக இல்லை பாதிக்கப்ப ட்ட இனம் என்றரீதியில் எமக்கு பிரச்சினைகள் பல உள்ளன. இதற்கு தீர்வு காணப்படவே ண்டும். நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு சந்திப்புகளும் ஏமாற்றத்தையே தந்துள்ளன.

பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உங்களை நம்பி தொ டர்ந்து பேசுகின்றபோதும். ஏமாற்றமே மிஞ்சுவதால் தீர்க்கமான முடிவு எடுக்கவே ண்டிய நிர்ப்பந்த திற்குள் தள்ளப்பட்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது தமிழ் தரப்பினால் காணி விடுவிப்புää அரசியல் கைதிகள் விடுவிப்பு திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் சமகால பிரச்சினைகள் தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டது.