மினசாரக் கட்டணத்தை 20 வீதத்தினால் குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

2023ம் ஆண்டுக்கான மின்சாரத் கேள்வி தொடர்பான மெய்யான தேவையை விடவும் கூடுதல் அளவில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபை கட்டணங்கள்

மின்சாரத் தேவை தொடர்பில் மித மிஞ்சிய அளவில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக மின்சார சபை ஒப்புக்கொண்டுள்ளது.

மின்சாரத் தேவையை கருத்திக் கொண்டு கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை மின்சார சபை கட்டணங்களை 66 வீதத்தினால் உயர்த்தியுள்ளது.

இது ஒர் பிழையான தீர்மானம் என்பது இதன் மூலம் புலனாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.