அண்மையில் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பியவர் கடத்தல்.

கல்முனை பொலிஸ் பிரிவிக்கு உட்பட்ட அம்மன் கோயில் வீதியில் வசித்த சிவதர்ஷன் என்பவரே நேற்றைய தினம் ( ஏப்ரல் 16 ) இரவு 7.30 மணியளவில் வான் ஒன்றில் வந்த இனம் தெரியதோரால் கடத்தப்பட்டுக் கொண்டு சொல்லப் பட்டுள்ளார் என தெரிவைக்கப்படுகிறது.

தனது மனைவியின் உயர்கல்விக்காக பிரித்தானியாவுக்கு சென்றிருந்த கடத்தப்பட்ட நபர் கடந்த வாரம் நாடு திரும்பி இருந்தார் என குறிப்பிடும் உறவினர்கள், இது தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றிருந்த நிலையில், முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள பொலிஷார் மறுத்து விட்டனர் என்றும் உறவினர்கள் தெரிவித்தார்கள்.

கடத்தப்பட்ட நபர் கல்முனை காணி பதிவாளர் அலுவலகத்தில் காணி பதிவாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.