எரிபொருள் விலை குறைப்பின் பயனை நுகர்வோருக்கு வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குபவர்களிடம் நிதியமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

எரிபொருள் விலை குறைப்பின் பலனை நுகர்வோருக்கு வழங்குவதற்கு பல நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என நிதி அமைச்சுக்கு பல முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அமைச்சின் கோரிக்கை

இதன்படி, ஆரம்ப கட்ட நடவடிக்கையாக அமைச்சு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

மேலும், எரிபொருள் விலை குறைப்பு நிவாரணத்தை மக்களுக்கு வழங்குவதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, எரிபொருளின் விலையை குறைப்பதை ஒப்பிடும் போது அரிசியின் விலையையும் ஓரளவு குறைக்க முடியும் என நுகர்வோர் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

You missed