(அபு அலா)

உடல் வலுவூட்டல் பயிற்சி நிலைய திறப்பு விழாவு மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான உடல் வலுவூட்டல் பயிற்சி அங்குரார்ப்பண நிகழ்வும் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்கள வரோதயநகர் அரச வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை (09) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் நூ.மு.நௌபீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க பிரதம அதிதியாவும், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) ஏ.மன்சூர், கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி.திசாநாயக்க, பேரவைச் செயலக செயலாளர் எம்.எம்.நஸீர் மற்றும் திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.