நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணங்கள் வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை

வேறு தெரிவுகள் இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.