நானுஓய – ரதல்ல குறுக்கு வீதியில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துள்ளானது.

இதில் குறைந்த பட்சம் 7 பேர் மரணித்ததாக அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் பொலிசார் மரணித்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக தெரிவித்தனர்.

சுற்றுலா சென்ற வேன் ஒன்றை, ப்ரேக் இல்லாத பேருந்து ஒன்று மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

பேருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்திருப்பதாகவும், அங்கு இருள் காரணமாக மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சற்று முன் கிடைத்த தகவல்

கொழும்பு தார்ஸ்டன் வித்தியாலயத்தின் மாணவர்களை ஏற்றி சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்திருப்பதாகவும், அதில் பயணித்த 47 மாணவர்கள் சிறுசிறு காயங்களுடன் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.