இலங்கையில் கடல் மட்டம் உயரும் அபாயம் உள்ளதென நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நாட்டின் காலநிலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றமே இதற்கான காரணம் என அவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு பிராந்தியத்தில் வறண்ட காலநிலை அதிகரித்து வருவதாக சொல்ஹெய்ம் மேலும் குறிப்பிட்டார்.

நாட்டில் சுற்றுச்சூழல் ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம் பணியாற்றி வருகின்ற நிலையில் அரசாங்கத்திற்கு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார் .