கல்முனை நகரில் இயங்கும் தனியார் வைத்தியசாலையின் பிறப்பு பதிவு நடவடிக்கையில் பிழையான வழிநடத்தும் நிர்வாகமும் அதனை கண்டு கொள்ளாத அரச உத்தியோகத்தர்களும்.

மற்றும் கல்முனை நகர் மற்றும் கல்முனைக்குடி பிறப்பு இறப்பு பதிவு பிரிவு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக.

எம் நாட்டில் ஒரு குடிமகனுக்கு மிக முக்கியமான ஒரு ஆவணம் அவரது பிறப்பு சான்றிதழ் ஆகும்.
அதை குறுகிய நோக்கம், இனவாத நோக்கொடும் சில அதிகாரிகள் கல்முனையில் இயங்கி வருவது தொடர்பில் மக்களை தெளிவு படுத்தும் நோக்கோடு இவ் அறிக்கையை வெளியிடுகின்றோம்.
பல தசாப்தங்களாக இருந்து வந்த ஊரான கல்முனைக்குடி எனும் ஊர் கடந்த 5,6 வருடங்களுக்குள் தற்போது மறைக்கப்பட்டு, கல்முனை ஆக மாற்றப்பட்டு வருகிறது. அதன் செயல்பாடாக கல்முனை ஊரின் பெயர் பலகை கல்முனைக்குடி சாய்ந்த மருது எல்லையில் காட்சிப்படுத்த பட்டுள்ளது.
கல்முனையில் தமிழ் மக்களின் செறிவை குறைத்து காண்பிக்கவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தை குலைத்து, பொது மக்களுக்கான சேவையை வழங்க தடை ஏற்படுத்தும் நோக்கோடு ஒரு சில இனவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். அதன் ஒரு செயல்பாடாக கல்முனை நகரில் இயங்கும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்பு பதிவை வேறு பிறப்பு இறப்பு பதிவாளர் பிரிவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. குறித்த தனியார் வைத்தியசாலை கல்முனை நகரில் இயங்குவதால் அங்கு இடம் பெரும் மகப்பேறு பதிவுகள் கல்முனை நகர் பிறப்பு இறப்பு பதிவாளர் பிரிவில் பதிவு செய்யப்பட்டு, அதன் பிரதிகள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். இது மாறாக குறித்த தனியார் வைத்தியசாலை நிர்வாகம் அங்கு மகப்பெற்றுக்காக அனுமதிக்கப்படும் நபர்களிடம் பிறப்பு பதிவை கல்முனைக்குடி பதிவாளர் பிரிவு பதிவு செய்யும்படி கட்டாயப்படுத்தி, பலவந்தப்படுத்தி பிறப்பு பதிவை பதிவு செய்ய நிர்ப்பந்தம் செய்கின்றனர்.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அரச அலுவலகங்களுக்கு கடிதங்கள் அனுப்பியதை தொடர்ந்து அங்கு இருந்து சம்மந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கும், சம்பந்தமான வைத்தியசாலைக்கும், குறித்த பிறப்பு இறப்பு பதிவாளருக்கும் கடிதங்கள் அனுப்ப பட்டு இருந்தது. இருந்தும் அது தொடர்பில் அவர்கள் கருத்தில் கொள்ளாது தொடர்ந்தும் இவ் முட்டால் தனமான முறையில் செயல் பட்டு வருகின்றனர்.
தற்போது பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தி வரும் E சனத்தொகை ( E Population ) திட்டத்தின்கீழ் இச் செயல்பாட்டினால் குழப்பம் கொள்ள சந்தர்ப்பம் உள்ளதுடன், இந்த பிறப்பு இறப்பு பதிவை கணனிமய படுத்தலின் போதும் பல பிழைகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. இதனால் குறித்த குழந்தையின் எதிர்காலத்தில் பல சிக்கல்களை எதிர்கொள்ளவும் சந்தர்ப்பம் உள்ளது.
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள பதிவாளர் பிரிவில் கல்முனை நகர் என்பது தரவை பிள்ளையார் ஆலய வீதியின் வடக்கு புறம் தொடக்கம் தாள வெட்டுவான் வீதியின் தெற்கு புறம் வரையான பகுதியே ஆகும்.
இந்த பகுதியில் உள்ள வீட்டில் அல்லது தனியார் வைத்தியசாலைகளில் அரச வைத்தியசாலையில் இடம்பெறும் பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான பதிவுகள் கல்முனை நகர் பதிவாளர் ஊடாகவே செய்யப்படும்.
கல்முனை நகர் பகுதியானது கிராம சேவகர் பிரிவுகளான
KP – 61/01 – கல்முனை 01
KP – 61/02 – கல்முனை 01A
KP – 61/03 – கல்முனை 01B
KP – 66/04 – கல்முனை 01C
KP – 66/05 – கல்முனை 01D
KP – 66/06 – கல்முனை 01E
KP – 66/07 – கல்முனை 02
KP – 66/08 – கல்முனை 02A
KP – 66/09 – கல்முனை 02B
KP – 59/02 – கல்முனை 03
KP – 59/01 – கல்முனை 03A

இவற்றை உள்ளடக்கியதாகும். இதில் குறித்த தனியார் வைத்தியசாலை ஆனது கல்முனை 03 அதாவது கிராம சேவகர் பிரிவு KP-59/02 இல் உள்ளது.

கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள பதிவாளர் பிரிவில் கல்முனைக்குடி பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் பிரிவானது

KP – 58 – கல்முனைக்குடி 01
KP – 58/C – கல்முனைக்குடி 02
KP – 58/0A – கல்முனைக்குடி 03
KP – 58/0B – கல்முனைக்குடி 04
KP – 56 – கல்முனைக்குடி 05
KP – 56/F – கல்முனைக்குடி 06
KP – 56/E – கல்முனைக்குடி 07
KP – 56/D – கல்முனைக்குடி 08
KP – 56/C – கல்முனைக்குடி 09
KP – 56/B – கல்முனைக்குடி 10
KP – 56/A – கல்முனைக்குடி 11
KP – 55 – கல்முனைக்குடி 12

ஆகிய கிராம சேவகர் பிரிவை உள்ளடக்கிய கல்முனைக்குடி பதிவாளர் பிரிவு உள்ளது. இது தரவை பிள்ளையார் ஆலய வீதியின் தென் புறம் தொடக்கம் சாஹிரா கல்லூரி வீதியின் வடக்கு புறம் வரையாகும்.

ஆகவே தவறான எண்ணத்தோடு செய்யப்பட்டு, குறித்த தனியார் வைத்தியசாலை நிர்வாகமும் மற்றும் அரச அதிகாரிகளும் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என கேட்டு கொள்வதுடன். இது தொடர்பில் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்கிறோம்.

நன்றி.